"பாரினி லெழுமுதல் மொழி தமிழ் வாழ்க
பயிலுழ்நல் மாணவர் வாழ்க
தேர்வினில் பலகலைத் தேர்ச்சியில் ஞானம்
திகழும்வல் லாசிரியர் வாழ்க .
கலியுகத் தெய்வப் பதிகதிர் காமம்
கதியருள் மலைநில மாகும்
மலிபொருள் மொனரா கலைபுக ழாளும்
மகிமையின் எழில்வள மாகும்.
பொலிவுடைப் பாலா றுயர்நிலை காணப்
புதுக்கிடும் விபுலா னந்தா
வலிவிடை நாளும் அறிவொளி வீசி
வளர்கலை கூடியே வாழ்க.
காவொடு மலையும் தாவிடு முகிலும்
கலகல வொலிதரு மாறும்
தோளோடு நிலையாய்த் தொழில் தரு நல்வோர்
துயரற நாளுமே கூடும்
சீருடைக் குறிஞ்சி பூவிசை யாழ்நூல்
செய்தவன் பெயரினைத் தாங்கும்
மாதமிழ் வித்தி யாலய மென்றும்
மாபர்கலை யகமெனவாழ்க."





